பெரம்பலூர் : பெரம்பலூரில் வாரண்டி காலத்தில் பழுதுநீக்குவதற்காக விடப்பட்ட சுமை வாகனத்திற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டதை எதிர்த்து பெண் தொடர்ந்த வழக்கில், ரூ.20ஆயிரம் இழப்பீடு வழங்குமாறு, வாகன விற்பனை நிறுவனத்திற்கு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்திரவிட்டது.

பெரம்பலூர் புறநகர் துறைமங்கலம் நான்குரோடு அருகே சோ.செல்வராஜ் என்பவர் சுமைவாகனம் விற்பனை செய்யும் முகவாண்மை நிறுவனம் (டீலர்) நடத்திவருகிறார்.

இந்த நிறுவனத்தில் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா தழுதாழையை சேர்ந்த விவசாயி தேவேந்திரன். 2010-ல் ஜூலை மாதத்தில் ஒரு நான்குசக்கர சுமை வாகனம் வாங்கி அதனை தனது மனைவி லெட்சுமி பெயரில் வாகனப்பதிவு செய்திருந்தார்.

வாகன விற்பனையின்போது, சிறப்பு சலுகையாக 3 ஆண்டு 3 லட்சம் கி.மீ.வரை வாரண்டி என்று அறிவிக்கப்பட்டது. லெட்சுமியின் வாகனம் சிலமாதங்கள் ஓடி 39ஆயிரத்து 387 கி.மீ. வந்தபோது வாகனம் பழுதானது. பழுதான வாகனத்தை பழுது நீக்கம் செய்துதருமாறு லெட்சுமி 2011 ஏப்ரல்மாதத்தில் வாகன டீலர்சிப்பை அணுகினார். இதனைத்தொடர்ந்து வாகனம் பழுதுபார்த்த வகையில் லேத் வேலை செய்யப்பட்டதாக கூறி லெட்சுமியிடம் ரூ.5ஆயிரம் ரொக்கம் அந்த நிறுவனம் வசூலித்தது. மேலும், பழுதுநீக்கத்திற்கான இதர செலவுகள் ரூ.38ஆயிரம் செலுத்தினால்தான் வாகனத்தை வெளியேவிட இயலும் என்று அந்த நிறுவனம் கூறியது.

இதில் மனஉளைச்சலுக்கு ஆளான லெட்சுமி பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் சுமைவாகன விற்பனை நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் மன்ற தலைவர் கலியமூர்த்தி, உறுப்பினர்கள் அன்பழகன், ஜெயலட்சுமி ஆகியோர், கொண்ட குழுவினர், லட்சுமியின் வாகனத்தை ஒரு மாதத்திற்குள் முற்றிலும் கட்டணமின்றி பழுதுநீக்கம் செய்து தரவேண்டும்.

லெட்சுமியை மனஉளைச்சலுக்கு ஆளாக்கிய, ரூ.20ஆயிரம் இழப்பீடு தொகையும், வழக்கு செலவிற்காக ரூ.2 ஆயிரத்தையும் 2 மாதத்திற்குள் லெட்சுமிக்கு, வாகன விற்பனை நிறுவன உரிமையாளர் செல்வராஜ் வழங்கவேண்டும் என்று உத்திரவிட்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!