Exculsive NEWS: only on kalaimalar.com
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் வழங்கப்பட்ட விலையில்லா மிக்சி கிரைண்டர், பேன் ஆகியவை இணைய தளத்தில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள சம்பவம் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் வழங்கப்பட்ட விலையில்லா மிக்சி, கிரைண்டர், பேன் ஆகியவற்றை பயனாளி ஒருவர் விற்பனைக்காக இணைய தளத்தில் விற்பனைக்கு அறிவித்துள்ளார். அதில், உபயோகப்படுத்தப்படாத புதிய பொருட்களாக உள்ளன. விலை இரண்டு ஆயிரம் என அறிவித்துள்ளார்.
மக்களின் வரிப்பணம் வீணாவதற்கு இதுவும் ஒரு சான்று என்றே கூறலாம். நாட்டு மக்கள் உழைத்துவிட்டு உண்ண உணவு இன்றி கூட வாங்கும் பொருட்களுக்கு வரி செலுத்து பெற்று செல்கின்றனர். ஆனால், அரசியல்வாதிகள் இலவசமாக வழங்க வேண்டிய மருத்துவத்தை வழங்கவில்லை, கல்வியை வழங்க வில்லை. அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வில்லை. ஆயிரம், ஆயிரம் கோடி பணத்தை தேவையானவர்களுக்கு வழங்காமல் தேவையற்றவர்களுக்கு தகுதியற்ற பொருட்களை வழங்குவது என்பது வேதனைக்குரியது….