தேமுதிக தலைமைக்கழகம் சார்பில் விடுத்துள்ள அறிவிப்பு :
கடலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள கடும் சேதத்தினாலும், பாதிப்புகளாலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப்போயுள்ளது. அதனால் பொதுமக்கள் பல்வேறு கஷ்டங்களையும், துன்பங்களையும் அடைந்துள்ளனர்.
இந்தநிலையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் மக்களுக்காக மக்கள் பணி நல உதவிகள் வழங்கும் பொதுக்கூட்டம் தற்போதும் தொடர்ந்து நடைபெறுவதை அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் விரும்பவில்லை.
எனவே வருகின்ற நவம்பர் 17,18,19 மற்றும் 21 ஆகிய தேதிகளில் பெரம்பலூர்,அரியலூர்,கடலூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் நடைபெறுவதாக இருந்த பொதுகூட்டங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. மீண்டும் மாற்று தேதி அறிவிக்கப்பட்டு மேற்படி மாவட்டங்களில் மக்களுக்காக மக்கள் பணி நல உதவிகள் வழங்கும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும் என தேமுதிக கட்சியின் தலைமை கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.