பெரம்பலூர்: பெரம்பலூர் அட்வகேட் அசோசியசன் தேர்தலில் தலைவராக வழக்கறிஞர் மணிவண்ணன் தேர்வு
பெரம்பலூர் அசோசியசன் வழக்கறிஞர் சங்க தேர்தல் கடந்த 26ம் தேதி நடைபெற்றது.
மூத்த வழக்கறிஞர்கள் ரெங்கசாமி, சஞ்சீவிராஜன், சீனிவாசன், முகமது இலியாஸ், மற்றும் செந்தாமரை கண்ணன், ரத்தினவேல், தமிழ்ச்செல்வன், துரை, செந்தில்ராஜன், பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தேர்தலில் 1989 முதல் பணியாற்றி வரும் வழக்கறிஞர் எஸ்.மணிவண்ணன், தலைவராகவும், வழக்கறிஞர் எஸ்.அருணன் செயலாளராகவும், வழக்கறிஞர் என்.சுப்பரமணியன் பொருளாளராகவும் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
துணைத் தலைவர்களாக வி. முத்துசாமி, ஏ.பி. சிவா, துணைச் செயலாளராக எம்.பி. அழகேசன் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.
வழக்கறிஞர் சங்க தேர்வான பொறுப்பாளர்களுக்கு வரும் ஜுலை 1ம் தேதி பாராட்டு விழா நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
மூத்த வழக்கறிஞர் பி.கருணாநிதி நன்றி கூறினார்.