பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் இரா.தமிழ்செல்வன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இதையொட்டி பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள அதிமுக தேர்தல் அலுவலகத்திலிருந்து அதிமுக தொண்டர்களுடன் சென்று பெரம்பலூர் கோட்டாசியர் அலுவலகத்தில் கோட்டாசியர் பேபியிடம் வேட்பு மனு தாக்கல் செய்து தேர்தல் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார். முன்னாள் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர் கர்ணன்(ஆலத்தூர்), சிவபிரகாசம் (வேப்பந்தட்டை), பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் மருதைராஜா ஆகியோர் உடனிருந்தனர்.
அவருக்கு மாற்று வேட்பாளராக அவரது மனைவி பரியதர்ஷினி தாக்கல் செய்தார். அதிமுக தொண்டர்கள், கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.