பெரம்பலூர் அம்மா உணவகங்கள் மூலம் ரூ.7,13,171 மதிப்பிலான உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு முதலமைச்சர் 24.5.2015 அன்று ஏழை, எளிய மக்களுக்கு மலிவு விலையில் தரமான உணவு வழங்கிடும் வகையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியான பேருந்து நிலையம் மற்றும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமணை ஆகிய இரண்டு இடங்களில் அம்மா உணவகவகங்களைத் திறந்து வைத்தார். இந்த உணவகங்கள் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் அமைந்திருக்கிறது.

இந்த அம்மா உணவகங்களில் காலை 7.00 மணி முதல் 10.00 மணி வரை இட்லி சாம்பாரும், மதியம் 12.00 மணி முதல் 3.00 மணி வரை சாம்பார் சாதம் மற்றும் தயிர் சாதமும், தமிழ்நாடு மகளிர்மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் பணியமர்த்தப்பட்ட மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் சுகாதார முறைப்படி தயாரிக்கப்பட்டு பொது மக்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன.

இட்லி ஒன்று 1 ரூபாய் வீதமும், சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும் மற்றும் தயிர்சாதம் 3ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. மலிவு விலையில் உணவு கிடைப்பதால் பொதுமக்களும் ஆர்வமுடன் சாப்பிட்டு செல்கின்றனர்.

அதன்படி பெரம்பலூரில் உள்ள இரண்டு அம்மா உணவகங்களிலும் இதுநாள் வரையில் 2,39,178 இட்லிகள் ரூ.2,39,178 மதிப்பிலும், 59,425 சாம்பார் சாதங்கள் ரூ.2,97,125 மதிப்பிலும், 58,956 தயிர்சாதங்கள் ரூ.1,76,868 மதிப்பிலும் என மொத்தம் ரூ.7,13,171 மதிப்பிலான உணவுபொருட்கள் அம்மா உணவகங்கள் மூலமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது, என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!