பெரம்பலூர் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் புதிய அணுகுமுறையிலான கல்வித்திட்டத்தின் கீழ் பெண் கல்வி என்ற உட்கூறின் கீழ் மாணவியர்களுக்கு தற்காப்பு (கராத்தே) பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இன்று 10.08.2015 முதல் பெரம்பலூர் வட்டார வளமையத்திற்குட்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி, குரும்பலூர் பள்ளியில் காலை 11.00 மணி முதல் 12.30 மணி வரை மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி, எசனை பள்ளியில் மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை திங்கள் மற்றும் வியாழன் கிழமை வாரத்தில் இருநாட்களில் கராத்தே வகுப்பு நடைபெறுகிறது.
மொத்தம் அரசு பள்ளியில் பயிலும் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள 100 மாணவிகள் இப்பயிற்சியின் மூலம் பயன் பெறுவர்.
வாரம் இரண்டு வகுப்பு வீதம் மொத்தம் 40 வகுப்புகள் 5 மாதங்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது. இத்தகவலை வட்டார தகவல் ஒருங்கிணைப்பாளர; கு.தேவகி தெரிவித்துள்ளார்.