மாவட்ட ஆட்சியர் தரேஸ்அஹமது தெரவித்துள்ளதாவது :
பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை, மருத்துவக்கல்லூரிக்கு இணையான வசதிகளுடன் தரம் உயர் த்திட தமிழக அரசு பல்வேறு முனைப்பான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது.
அதன்படி அரசு தலைமை மருத்துவ மனையின் அருகில் தமிழக அரசு சுமார; ரூ.3 கோடியே 70 மதிப்பில் 100 படுக்கை வசுதிகளுடன் கூடிய தாய், சேய் மற்றும் மகப்பேறு சிகிச்சை மையத்தினை அமைத்து, சிறப்பாக செயல்படுத்தி வருகின்றது.
பெரம்பலூர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் தமிழக முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத்திட்டத்தின் மூலம் சுமார் 2,881 நபர்களுக்கு ரூ.4கோடியே 11 இலட்சம் செலவில் பல்வேறு வகையான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த ஆகஸ்ட் – 2012 முதல் சிறுநீரக செயலிழப்பு நோயாளிகளுக்காக இரத்த சுத்திகரிப்பு மையம் செயல்பட்டு வருகின்றது. இதுவரை இம்மையத்தின் மூலமாக 139 சிறுநீரக நோயாளிகள் தொடர;ச்சியாக இரத்த சுத்திகரிப்பு செய்து வருகின்றனர்.
வேறெங்கும் இல்லாத வகையில் அரசு தலைமை மருத்துவ மனையில் உள்ள இரத்த சுத்திகரிப்பு நிலையம் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகின்ற காரணத்தினால் மையத்தினை தரம் உயரத்தும் நோக்கிலும்,
இரத்தம் சுத்திகரிப்பு செய்ய வருவோரின் வசதியை கருத்தில் கொண்டும் ரூ.6 இலட்சம் மதிப்பில் ஏற்கனவே இருந்த 03 கருவிகளுடன் மேலும் புதியதாக 05 கருவிகள் இணைக்கப்பட்டதன் மூலம் தற்பொழுது ரூ.48 இலட்சம் மதிப்பில் 08 நவீன இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதன் மூலம் சிறுநீரக பாதிப்புக்குள்ளானவர்கள் விரைவாகவும், முழுமையாகவும் தங்களின் இரத்தத்தினை சுத்திகரிப்பு செய்து கொள்ள முடியும்.
சிறுநீரகம் செயலிழந்து நோய் எதிர்ப்புசக்தி குறைவதன்மூலம் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கென்றே தனியாக ஒரு இரத்த சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.
எனவே சிறுநீரக பாதிப்புக்குள்ளானவர;கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தங்களின் உடல் நலனை பாதுகாத்துக்கொள்ளலாம் என ஆட்சியர் தரேஸ் அகஹது தெரிவித்துள்ளார்