பெரம்பலூர் அருகே உள்ள கீழக்கணவாய் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியை சேர்ந்த 131 மாணவ, மாணவிகளுக்கு ரூ.18 லட்சத்து 56 ஆயிரத்து 139 மதிப்பிலான விலையில்லா மடிக்கணிணிகளை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்செல்வன், நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.பி.மருதராஜா முன்னிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் ஒன்றியக் குழுத்தலைவர் து.ஜெயக்குமார், மாவட்ட ஊராட்சிக் குழுத் துணைத் தலைவர் ந.சேகர், அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கி.சுந்தராஜன், ஒன்றியக் கவுன்சிலர் சு.அண்ணாதுரை, ஆலம்பாடி ஊராட்சி மன்ற தலைவர் மா.ஜெகதீஷ் கல்லூரி மாணவ,மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.