பெரம்பலூர் அருகே நான்கு குழந்தைகளின் தாயை கண்டுபிடித்து தரக்கோரி கணவர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பென்னக்கோணம் கிராமத்தை சேர்ந்தவர் வடமலை(41), இவரது மனைவி பொன்மலர்(31), இருவருக்கும் கடந்த 13
ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இதில், வர்ஷினி(10), தீபிகா(8), ரோஷன்(4), ரோஹித்(4) ஆகிய நான்கு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 28ந்தேதி அன்று அதிகாலலை முதல் பொன்மலர் திடீரென காணவில்லை. இதுகுறித்து அறிந்த அவரது கணவர் வடமலை
மனைவி பொன்மலரை உறவினர்கள் சிலரின் உதவியுடன் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால் தனது மனைவியை கண்டுபிடித்து தரக்கோரி இன்று
மங்களமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சிட்ரிக்மேனுல் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பொன்மலரை தீவிரமாக தேடி வருகிறார்.