பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் சின்னபிள்ளை மகன் கிருஷ்ணமூர்த்தி(30), கொத்தனாரான இவருக்கும், சித்தளாக பணியாற்றிய அதே பகுதியை சேர்ந்த லலிதா(23) என்பவருக்கும் கடந்த ஓர் ஆண்டுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.
இதனிடையே கிருஷ்ணமூர்த்தி அடிக்கடி மது குடித்து விட்டு வந்ததால் கனவன் மனைவியிடையே குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாலை 3.30 மணியளவில் கிருஷ்ணமூர்த்தி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிருஷ்ணமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
லலிதா அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.