பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்தார்.
பெரம்பலூர் அருகே உள்ள ரெங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோகன் மகன் கதிரவன்(9).
சற்று மன வளர்ச்சி குன்றிய கதிரவன் துறைமங்கலத்தில் உள்ள காப்பகத்தில் தங்கி படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெற்றோரை பார்ப்பதற்காக ரெங்கநாதபுரம் சென்ற கதிரவன் நேற்று மாலை திடீரென காணாமல் போய்விட்டார்.
இதனைத்தொடர்ந்து கதிரவனை அவரது பெற்றோர்கள் உறவினர்கள் தேடி வந்துள்ளனர்.
இதனிடையே அதே ஊரைச்சேர்ந்த சிங்காரவேல் என்பவருக்கு சொந்தமான கிணற்றில்
சிறுவன் கதிரவன் இறந்து சடலமாக கிடப்பது தெரிய வந்தது.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
.