பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூர் அருகே சேற்றில் சிக்கிய கிளைமான் பாரிதாபமாக இறந்தது. இதனை வனத்துறையினர் மீட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வி.களத்தூர் வனப்பகுதியில் ஏராளமான மான்கள் கூட்டம் கூட்டமாக வசித்து வருகிறது. இந்த மான்கள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு விவசாய வயல்வெளி பகுதிகளுக்கு மேய்ச்சலுக்கு சென்று வரும். அதே போல் இன்று மதியம் மான்கள், கூட்டமாக வனப்பகுதியை விட்டு வெளியே வந்துள்ளது. அப்போது திருமாந்துறைக்கும் கீரனூருக்கும் இடையே உள்ள சாலையோரத்தில் சேறும் சகதியுமாக இருந்த பள்ளத்தில் 3 வயது மதிக்கத்தக்க கிளைமான் ஒன்று சிக்கிக்கொண்டது. நீண்ட நேரமாக மான் சேற்றிலிருந்து வெளியே வர போராடியும் வெளியேற முடியவில்லை.
இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கண்டவுடன் பெரம்பலூர் தீயணைப்பு மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து தீயணைப்பு நிலைய அதிகாரி ஆறுமுகம் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மானை கயிற்று உதவியுடன் சேற்றிலிருந்து வெளியே கொண்டு வந்தனர். ஆனால், வெளியே கொண்டு வந்த சிறிது நேரத்தில் மான் பாரிதாபமாக (பயத்தில்) உயிரை விட்டது. தீயணைப்ர் படையினர், இறந்த மானை வனதுறையினாயிடம் ஒப்படைத்தனர். அவர்கள் கால்நடை மருத்துவரை கொண்டு பரிசோதணை செய்து வனத்தில் புதைத்தனர்.