பெரம்பலூர் : சம்பவ நேரம் சுமார் காலை 11.30 மணி.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் கேட் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுவே உள்ள பூச்செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி கொண்டிருந்த டேங்கர் லாரியின் பின் பகுதியில், திருப்பதியிலிருந்து திருச்சி நோக்கி சென்ற ஆம்னி பஸ் ஒன்று அதிவேகமாக மோதியது விபத்துக்குள்ளானது.
ஆம்னி பஸ் மோதிய வேகத்தில் நிலை தடுமாறிய தண்ணீர் லாரி சாலையின் பக்க வாட்டில் உள்ள தடுப்பு சுவரில் ஏறி நின்றது. இந்நிலையில்
அவ்வழியே திருச்சி நோக்கி சென்ற கார் ஒன்று டிரைவரின் சாதுர்த்தியத்தால், தண்ணீர் லாரி மற்றும் ஆம்னி பஸ் பக்க வாட்டில் மோதி நின்றது.
அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த விபத்தில் காரில் பயணம் செய்த இருவரும், தண்ணீர் தெளித்து கொண்டிருந்த இளவழகன் என்பவரும் காயமடைந்தனர். மேலும், விபத்துக்கு காரணமான ஆம்னி பஸ் டிரைவர் ராமதாஸ் இடிபாடுகளுக்கிடையே சிக்கி கொண்டார்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் இடிபாடுகளுக்கிடையே சிக்கிய ஆம்னி பஸ் டிவைரை நீண்ட போராட்டத்திற்கு பின்னர் பாதுகாப்பாக மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனால், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து
பாதிக்கப்பட்டது. இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.