பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே தற்கொலை செய்து கொண்ட மருத்துவக்கல்லூரி மாணவி கீர்த்தனா படம்
பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூரில் தனியாருக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது.
இதில் இன்று காலை நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ராமராஜன் மகள் கீர்த்தனா 4 வது ஆண்டு மருத்துவம் (M.B.B.S.,) படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் அக்கல்லூரி விடுதியில் இன்று மாணவி தூக்கில் தொங்கி இறந்தாக கூறப்படுகிறது. இது குறித்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரனை நடத்தி வருகின்றனர்.