பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் தங்க சங்கலி பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தீவிர தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் அருகே உள்ள செஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் திருமுருகன், இவரது மனைவி சரோஜா(45), நேற்றிரவு காற்றோட்டத்திற்காக வீட்டின் கதவை திறந்து வைத்து, வாசற்படியோரம் தூங்கி கொண்டிருந்தார்.
நள்ளிரவு நேரத்தில், அங்கு வந்த மர்ம நபர், தூங்கி கொண்டிருந்த சரோஜாவின் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க சங்கியை பறித்து தப்பி ஓடிவிட்டனர். விழித்து கொண்ட சரோஜா, சத்தமிட்டார். அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து திருடனை பிடிக்க முயன்றனர், கொள்ளையன் கிடைக்கவில்லை.
இதுகுறித்து சரோஜா கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிந்து தங்கசங்கலியை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.