பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் நெற்குணம் கிராமத்தை சேர்ந்தவர்கள் துரைராஜ் (60), சுப்புலட்சுமி( 55) தம்பதியினர் இவர்கள்
இருவரும் நேற்று இரவு வழக்கம் வீட்டில் தனித்தனி அறையில் தூங்கி கொண்டிருந்தனர்.
இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் வீடு புகுந்த மர்ம நபர்கள் சிலர் சுப்புலட்சுமி கழுத்தில் அனிந்திருந்த 10 பவுன் தாலி கொடியை
பறித்துள்ளனர். விழித்து எழுந்த சுப்புலட்சுமி தாலி கொடியை கையால்பிடித்து கொண்டு திருடன், திருடன் என கூச்சலிட்டார்.
இதனால், சத்தம் கேட்டு அவரது கனவர் உள்ளிட்ட அக்கம் பக்கத்தினர். ஓடி வருவதற்குள் மர்ம நபர்கள் தாலியுடன் தப்பி விட்டனர். இந்த தாலிக்கொடி பறிப்பால் சுப்புலட்சுமியின் கழுத்தில் காயம் ஏற்பட்டது.
இந்நிலையில், அதே பகுதியில் உள்ள சீனிவாசன் மகன் ராஜகோபால்(70), சுப்பையா மகன் செந்தில்(45), கிருஷ்ணமூர்த்தி மகன் ராஜாராம்(40), அந்தோனிசாமி மகன் யேசுதாஸ்(50) ஆகிய நான்கு பேரின் வீடுகளில் மர்ம நபர்கள் சிலர் முன் பக்க கேட்டில் பூட்டப்பட்டிருந்த பூட்டு மற்றும் கதவை உடைத்து உள்ளே புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டிருந்த போது சத்தம் கேட்டு வீட்டின் உரிமையாளர்கள் விழித்து எழுந்ததால் மர்ம நபர்கள் தங்களின் கொள்ளை முயற்சியை கைவிட்டு தப்பியோடினர்.
இதுகுறித்து தகவலறிந்த கை.களத்தூர் காவல் நிலையத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிந்து நகை
பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், நேற்று முன்தினம் காவலர்கள் வீட்டிலேயே திருடர்கள் கைவரிசை காட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.