பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே நஞ்சு அருந்தி தற்கொலைக்கு முயன்ற புதுமாப்பிள்ளை உயிரிழந்தார்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உள்ள வெண்பாவூர் கிராமத்தை சேர்ந்த பூபதி மகன் மோகன் (வயது 27), வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழ்ச் செல்வி (20) என்ற பெண்ணுடன் மோகனுக்கு திருமணம் நடைபெற்றது.
தமிழ்ச் செல்வி பொறியியல் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் , இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனமுடைநது காணப்பபட்ட கடந்த 2 நாட்களுக்கு முன் நஞ்சு அருந்தி தற்கொலைக்கு முயன்றார். அவரை அங்கிருந்தவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.
இது குறித்து கை.களத்தூர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.