பெரம்பலூர்.ஜுன்.1- பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் அருகே நடந்த சாலை விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானர். 19 பேர் காயமடைந்தனர்.
புதுச்சேரியை சேர்ந்த 20 பேர் வேனில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றுவிட்டு சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.
அவர்கள் வந்த வேன் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை வாலிகண்டபுரம் அருகில் அதிகாலை சுமார் 4 மணிஅளவில வந்து கொண்டிருந்த போது நெடுஞ்சாலையயும், சேவை சாலையையும் (சர்வீஸ் ரோடு) பிரிக்கும் கட்டையின் மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் வேனில் பயணம் செய்த ரெட்டிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை மகன் ராஜேஸ் (24) சம்பவ இடத்திலேயே உயிரியிழந்தார். வேனை டிரைவர் முருகானந்தம் என்பவர் ஓட்டி வந்துள்ளார். அவரும் படுகாயம் அடைந்தார். மேலும், வேனில் பயணம் செய்த அருணாசலம்(67), லட்சுமி(40) ஆகியோர் உள்பட 19 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மங்கமேடு போலீசார் சம்வ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு பெரம்பலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். விபத்துக் குறித்து ஓர் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.