பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே 10 சவரன் தங்க நகை, 10 ஆயிரம் ரொக்க பணதை பட்டப்பகலில் திருடி சென்ற திருடர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் அருகே உள்ள ஈச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்(33) பெரம்பலூர் மதுபான கடையில் வேலை பார்த்து வருகிறார், அவரது மனைவி மாலதி(29) கூலி வேலைக்கு சென்று விட்டார்.
மாலை 3 மணியளவில் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்ட்டு , பீரோவில் வைத்திருந்த 10 பவுன் தங்க நகை, ரூ: 10 ஆயிரம் ரொக்கம் திருடு போனது தெரிய வந்தது.
இது குறித்து சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிந்து திருடர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.