பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிராமத்தில் பட்டப்பகலில் பூட்டியிருந்த வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி திருடர்கள் 7 பவுன் தங்க நகை மற்றும் ரொக்கம் ரூ.10,500-யை திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிராமத்தை சேர்ந்தவர் வேம்படித்துரை (28), மனைவி கலைச்செல்வி(25). இன்று வழக்கம் போல் வீட்டை பூட்டி விட்டு வயலுக்கு சென்று விட்டனர்.
வேலைக்கு சென்று விட்டு, மாலை வீடு வந்து பார்த்த போது வீட்டின் மேற்கூரையில் பொருத்தப்பட்டிருந்த ஓடுகள் பெயர்த்து வீட்டினுள் இறங்கிய திருடர்கள் வீட்டில் வைத்திருந்த 7 பவுன் தங்க நகை மற்றும் கல்லூரியில் கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்ட 10 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்க பணம் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த கலைச்செல்வி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கலைச்செல்வியின் வீட்டை, தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் துப்பறியும் நாய் கொண்டு தடயங்களை சேகரித்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.