பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே எசனை கிராமத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பாலை உற்பத்தி செய்து அச்சங்கத்தின் மூலம் விற்று வருகின்றனர்.
இன்று வழக்கம் போல் கறந்து பாலை பாத்திரங்களில் வைத்துக் கொண்டு காலை 5 மணி முதலே காத்திருந்தனர். பால் கொள்முதல் செய்ய 8 மணி ஆகியும் சங்கப் பணியாளர்கள் வரவில்லை. மேலும், அவர்கள் கேட்டதற்கு பால் ஏற்றி செல்லும் கேன்கள் வரவில்லை என பதில் தெரிவிக்கப்ட்டது. முன் அறிவிப்பு இன்றி பால் கொள்முதல் செய்ய மறுத்ததை கண்டித்து எசனை, கீழக்கரை, இரட்டைமலைசந்து, கோவிந்தபுரம், பாப்பாங்கரை பகுதி பால் உற்பத்திகள் நூற்றுக்கணக்கானோர் ஒன்று திரண்டு ஆத்தூர் பெரம்பலூர் சாலையில் சாலை மறியிலில் ஈடுப்பட்டுனர். அப்போது அவ்வழியாக வந்த வாகனங்களுக்கு வழிவிடாமல் பால் கேன்களை சாலையின் குறுக்கே வைத்து போராட்டம் செய்தனர். இதனால், சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பேருந்து மற்றும் இதர வாகனங்களில் வந்த பள்ளி மாணவர்கள், அரசு அலுவலர்கள் பொதுமக்கள் ஆகியோர் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளாயினர். இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் மற்றும் பால்வளத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பால் கொள்முதல் செய்வதாக உறுதி அளித்தன் பேரில் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியல் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.