பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே உள்ள புதுநடுவலூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது வீட்டை பூட்டி வீட்டு வெளியூர் சென்றிருந்தார்.

மர்ம நபர்கள் இவரது வீட்டின் கதவை பூட்டை உடைத்து சுமார் 4 பவுன் மதிப்பு உள்ள மோதிரம், தோடுகள், ரொக்கம் 12 ஆயிரம் மற்றும் கால் கிலோ வெள்ளி, 6 பித்தளை அண்டாக்கள், பட்டுப்புடவைகள் திருடி சென்றனர். இவற்றின் மதிப்பு ரூ: 2 லட்சம் இருக்குமென கூறப்படுகிறது.

இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!