பெரம்பலூர் அருகே வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்து கொண்டு காதல் மனைவியை அடித்து கொடுமை படுத்தியவரை மகளிர் போலீசார் கைது
செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா டி.களத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர்(29), மனைவி ரஞ்சனி(27), இவர்கள் இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.
கடந்த ஆண்டு இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்து, உடல்நலக்குறைவால் கடந்த 2014 பிப்ரவரி மாதம் 4ந்தேதி உயிரிழந்தது.
இதனால், சுதாகரின் நடத்தையில் மாறுதல் ஏற்பட்டுள்ளது. இதனை ரஞ்சனி தட்டிக்கேட்டதால் அவரை அடித்து கொடுமை படுத்தியுள்ளார். இதனால் மனவேதனையடைந்த ரஞ்சனி கடந்த மாதம் டி.களத்தூர் கிராமத்திலுள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 24ந்தேதி அங்குசென்ற சுதாகர் ரஞ்சனியின் கழுத்திலிருந்த தாலியை இழுத்துஅறுத்து கொண்டு, சீதனமாக பெறப்பட்ட பொருட்களை வீட்டின் முன்வீசி சென்றுள்ளார்.
இதனைத்தொடர்ந்து ரஞ்சனி சம்பவம் குறித்து பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில் சுதாகர் அவரது மனைவி ரஞ்சனியை அடித்து கொடுமை படுத்தியது சம்பவம் உண்மை என தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சுதாகரை கைது செய்த மகளிர் போலீசார் அவரை பெரம்பலூர் குற்றவியல் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.