பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள நெய்குப்பை கிராமத்தை சேர்ந்தவர் அம்மாசி, இவரது மகன் ஊமைத்துரை (45), இன்று அவர் வயலில் உள்ள மின்சார பெட்டியில் உள்ள சுவிட்சை போட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் அவரை தாக்கியது.
சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த வ.களத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஊமைத்துரையின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.