பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே முன்னே சென்ற கன்டெயினர் லாரி மீது மோதிய பேருந்து சாலையை விட்டு தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் ஓட்டுரின் கால் முறிந்தது.
இன்று அதிகாலை சென்னையில் இருந்து புள்ளம்பாடியை நோக்கி அரசு விரைவுப் பேருந்து சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்தை சென்னையில் இருந்து கடலூர் மாவட்டம் தொழுதூர் வரை மலர்கண்ணன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். தொழுதூரில் இருந்து திருச்சி அருகே உள்ள புள்ளம்பாடியை நோக்கி மாற்று ஓட்டுநர் அருள்தாஸ் பேருந்தை ஓட்டி வந்துள்ளார். பேருந்து திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே தண்ணீர் பந்தல் வந்து கொண்டிருநத போது முன்னே சென்ற கன்டெயினர் லாரியை முந்த முயன்ற போது எதிர்பாரத விதமாக லாரியின் பின்புறம் மோதியது. இதில் லாரி சென்றுக் கொண்டிருந்த வழித் தடத்தை விட்டு விலகி எதிர்சாலையில் உருண்டது. பேருந்தை ஓட்டுநர் கட்டுப்பாட்டுக்கள் கொண்டு முயன்ற போது சாலையின் இடது புறத்தில் உள்ள பள்ளத்தில் பாய்ந்து, அருகில் மரக் கிளையில் மோதி நின்றது. இதில் ஓட்டுநர் காலில் முறிவு ஏற்பட்டது. பயணிகள் மரண பயத்தில் அலறினர். இது குறித்து தகவல் அறிந்த சுற்றுக்காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் சிக்கிய பேருந்து ஓட்டுரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பெரம்பலூர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.