Near Perambalur Rs. 4.19 Crore Government College Student Hostel; Collector, MLA started by lighting the lamp.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையில் இயங்கி வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு, கிருஷ்ணாபுரத்தில் பிற்படுத்தப்பட்டோர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் ரூ.4.19 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட அரசு மாணவர் விடுதியை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் சென்னை தலைமை செயலகத்திலிருந்து, வீடியோ கான்பிரன்ஸ் மூலம் இன்று காலை திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து கலெக்டர் கற்பகம், எம்.எல்.ஏ., பிரபாகரன் ஆகியோர் விடுதியில் குத்து விளக்கு ஏற்றி வைத்து சமையலறை உள்ளிட்ட உட்கட்டமைப்புகளை பார்வையிட்டனர். .

100 மாணவர்கள் தங்கும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த விடுதியில் தரைத்தளம் 420 சதுர மீட்டர், முதல் தளம் 412 சதுர மீட்டர், இரண்டாம் தளம் 412 சதுர மீட்டர் என மொத்தம் 1,244 சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ளது.

தரைத்தளத்தில் போர்டிகோ, சமையலறை, காப்பாளர் அறை மற்றும் மாணவர்கள் தங்கும் அறை என 5 அறைகளும், முதல் தளத்தில் கணினி அறை, உடல் நல குறைவு ஏற்படும் மாணவர்கள் தனியே தங்கும் அறை மற்றும் மாணவர்கள் தங்கும் அறை என 9 அறைகளும், இரண்டாம் தளத்தில் மாணவர் தங்கும் அறை 10 அறைகளும் என மொத்தம் 24 அறைகள் உள்ளன.

சமையலறைக்கு எரிவாயு செல்லும் வகையில் 5 சிலிண்டர்களுடன் இணைப்பு இணைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு கருதி தீயணைப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. போர்வெல் அமைக்கப்பட்டு தண்ணீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட துணை செயலாளர் தழுதாழை சி பாஸ்கர், ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், ஒன்றிய செயலாளர்கள் நல்லதம்பி, ஜெகதீசன், மாவட்ட தொண்டரணி பெரியம்மாபாளையம் ரமேஷ், மாவட்ட கவுன்சிலர் மகாதேவி ஜெயபால், வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய அவைத் தலைவர் அம்பேத்கர், அன்னமங்கலம் கவுன்சிலர் குணசேகரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செல்வக்குமார், அரும்பாவூர் பேரூராட்சி செயலாளர் ரவிச்சந்திரன், கிருஷ்ணாபுரம் கிளை திமுக நிர்வாகிகள், வி.களத்தூர் நூருல்ஹிதா இஸ்மாயில், வடகரை ஊராட்சி தலைவர் முருகேசன், பாண்டகபாடி வடிவேல், விஜயபுரம் திமுக கிளை செயலாளர் ராஜா முகமது, உள்பட கல்லூரி முதல்வர் பேராசிரியர்கள் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!