பெரம்பலூர் மாவட்டம் அகரம் சீகூர் அருகே லோடு ஆட்டோ கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 36 பேர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள கொத்தட்டை மற்றும் எறையூர் கிராமத்தை சேர்ந்த 35க்கும் மேற்ப்பட்ட கூலித்தொழிலாளர்கள் இன்று காலை 8
மணியளவில் பெரம்பலூர் மாவட்டம் குன்னம்அருகே உள்ளஅகரம்சீகூர் அடுத்த வசிஷ்டபுரம் கிராமத்தில் விவசாயிஒருவரது வயலுக்கு பருத்தி எடுப்பதற்காக
லோடு ஆட்டோவில் சென்றுள்ளனர்.
லோடு ஆட்டோவை பெரம்பலூர் அருகே உள்ள அயிலூர் கிராமத்தை சேர்ந்த தங்கவேலு மகன் சங்கர்(40), ஓட்டினார். ஆட்டோ அகரம்சீகூர்&அரியலூர் சாலையில் கருப்பட்டாங்குறிச்சி என்ற இடத்தில் அதிவேகமாக சென்ற போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லோடு ஆட்டோ சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் ஆட்டோவில் பயணம் செய்த கொத்தட்டை கிராமத்தை சேர்ந்த நல்லம்மாள்(42), எறையூர் கிராமத்தை சேர்ந்த சிவகாமி(59), ஆட்டோ டிரைவர்
சங்கர்(40), ஆகியோர் படுகாயமடைந்து திட்டக்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் கொத்தட்டை மற்றும் எறையூர் கிராமத்தை சேர்ந்தவர்களான சரஸ்வதி(19), மாலதி(35), தெய்வமணி(40), நிர்மலா(38), முத்துலட்சுமி(27),
ராஜேஸ்வரி(25), செல்வமணி(38) ஆகியோர் உட்பட 30க்கும் மேற்ப்பட்டோர் லேசான காயமடைந்து திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
இதுகுறித்து மங்களமேடு காவல் நிலையத்தில் ஆட்டோவில் பயணம் செய்த கூலித்தொழிலாளி சரஸ்வதி(19) அளித்த புகாரின் பேரில் எஸ்.ஐ.,மாரிமுத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.