பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் , அன்னமங்கலம் அருகே உள்ள அரசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா ( வயது 38 )விவசாயி. இவரது செல்போனுக்கு இன்று ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர் வங்கியில் இருந்து பேசுவதாகவும், ஏ.டி.எம் கார்டு நீண்ட காலமாக பயன்படுத்தாமல் இருப்பதால் காலாவதியாகியாகும் சூழ்நிலை உள்ளது. எனவே அதனை புதுப்பிக்க உங்களது. ஏ.டி.எம் கார்டின் எண் மற்றும் ரகசிய எண்ணை சொல்லுங்கள் என கேட்டுள்ளார்.
வங்கியில் இருந்துதான் பேசுகிறார்கள் என நினைத்த ராஜா ஏ.டி.எம் கார்டு எண் மற்றும் ரகசிய எண்ணை தெரிவித்துள்ளார். அதன் பிறகு வேப்பந்தட்டையில் உள்ள வங்கிக்கு வந்து பேசியது வங்கி அதிகாரிதானா என கேட்டுள்ளார். வங்கியிலிருந்து யாரும் பேசவில்லை என தெரிந்ததும் அதிர்ச்சியடைந்து வங்கி கணக்கில் இருப்புத் தொகை சரியாக உள்ளதா என சோதித்துள்ளார். அப்போதுதான் ரூ. 5 ஆயிரம் வங்கி கணக்கிலிருந்து எடுக்கப்பட்டு ஏமாற்றப்பட்டது விவசாயி ராஜாவிற்கு தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து ராஜா அரும்பாவூர் காவல் நியைலத்தில் கொடுத்த புகாரின் பேரில் நூதன மோசடியில் ஈடுபட்ட நபரை கண்டுபிடிக்க போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.