பெரம்பலூர்: அதிமுக சார்பில் வேப்பந்தட்டையில் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் இளங்கோவனின் உருவபொம்மை எரிக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திரமோடியும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் சந்தித்த நிகழ்வை கொச்சை படுத்தி காங்கிரஸ் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பேசினாராம். இதனை கண்டித்து வேப்பந்தட்டை ஒன்றிய அதிமுக சார்பில் வேப்பந்தட்டையில் இன்று காலை கண்ணுசாமி தலைமையில் அதிமுகவினர் காங்கிரஸ் மாநில தலைவர் இளங்கோவனின் உருவபொம்மை எரித்தனர்.
இதில், ஒன்றியக்குழுத் தலைவர் ஜெயலட்சுமி கனகராஜ், துணைத் தலைவர் வேலுசாமி, ஊராட்சி கழக செயலாளர் குழந்தை வேலு உள்பட கட்சி பிரமுகர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.