பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் கை.களத்தூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் ( 100 நாள் வேலை ) மூலம் அனைத்து தெருக்களிலும் உள்ள கழிவுநீர் கால்வாயை சுத்தப்படுத்தி, புல், பூண்டுகளை அகற்றி தூய்மை செய்யும் வகையில் பயனாளிகளுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்கு கை.களத்தூரை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பயனாளிகள் எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே கை.களத்தூர்-பெரம்பலூர் சாலையில் இன்று காலை சாலை மறியல் செய்ய முன்றனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு கை.களத்தூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் காமராஜ், வட்டார வளர்ச்சி அதிகாரி செந்தில், ஊராட்சி மன்றத் தலைவர் அழகுவேல் ஆகியோர் விரைந்து வந்து மறியலில் ஈடுபட முயன்றவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி கழிவுநீர் கால்வாய் சுத்தப்படுத்தும் பணி வழங்காமல் மாற்றுப்பணி வழங்குவதாக உறுதியளித்தனர். இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.