பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையிலுள்ள வங்கிக்கு 5 லட்சம் பணத்துடன் சென்ற மகனை
அடையாளம் தெரியாத நபர்கள் கடத்தி விட்டதாக அவரது தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

missingபெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் செங்கதிர்செல்வன் மகன் ராம்வினோத்(26) பி.எட்., பட்டதாரி. இவரது தந்தை நடத்தி வரும்
அக்ரோ சென்டர்) பூச்சு மருந்து கடைக்கு உதவியாக இருந்து வந்தார்.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 26ந்தேதி காலை செங்கதிர்செல்வன் 5 லட்ச ரூபாய் பணத்தை அவரது மகன் ராம்வினோத்திடம் கொடுத்து வேப்பந்தட்டையில் உள்ள தனது வங்கி கணக்கில் செலுத்தி விட்டு வருமாறு அனுப்பி வைத்துள்ளார்.

நீண்ட நேரமாகியும் ராம்வினோத் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த செங்கதிர்செல்வன் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டுள்ளார். செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்ததும். வேப்பந்தட்டைக்கு நேரில் சென்று தனது மகனை தேடி பார்த்ததோடு, வங்கி கணக்கில் பணம்
செலுத்தப்பட்டுள்ளதா என விசாரித்தில்வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படவில்லை என தெரிய வர பணத்துடன் ராம்வினோத் தலைமறைவாகி இருக்கலாம், சில நாட்கள் கழித்து வீட்டிற்கு வந்து விடுவான் என செங்கதிர்செல்வன் மனதை தேற்றி கொண்டு வீடு திரும்பி விட்டதாக தெறிகிறது.

இந்நிலையில் நான்கு மாதங்கள் ஆகியும் ராம்வினோத் வீடு திரும்பாததால் பணத்துடன் மகன் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கடத்தப்பட்டிருக்கலாம் என நேற்று அரும்பாவூர் காவல் நிலையத்தில் செங்கதிர்செல்வன் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் தங்கவேல் 5 லட்சத்துடன் காணாமல் போன ராம்வினோத்தை தீவிரமாக தேடி வருகிறார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!