பெரம்பலூர் அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் சார்பில் ஆண்டுதோறும் சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளியம்மன் கோவில் பூச்சொரித்தல் விழாவிற்கு பூ எடுத்து செல்வது வழக்கம்.
அதே போன்று இந்த ஆண்டும் பணியாளர்கள் கரகாட்டத்துடன் ஏற்பாடு செய்து இருந்தனர். அதில் கரகாட்டம் நடந்து கொண்டிருந்த போது வாலிபர் ஒருவர் கரகாட்டம் ஆடிய பெண்ணிடம் சில்மிசம் செய்ததாக கூறப்படுகிறது. அதில் தீயணைப்பு வீரர் ஒருவர் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதியில் ஏற்பட்ட கூட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் கரகாட்டத்தை ஒத்தி வைக்கும்படி கேட்டுக் கொண்டதின் பேரில் கரகாட்டம் அதிகாலை 4 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் அரசு போக்குவரத்து பணிமனை அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.