பெரம்பலூர் காமராஜர் வளைவு பகுதியில் இன்று கண்டெடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத முதியவர் சடலத்தை கைப்பற்றி அவரது உயிரிழப்பிற்கான காரணம் குறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காமராஜர் வளைவு பகுதியில் முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக வந்த தகவலையடுத்து பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த முதியவரின் சடலத்தை கைப்பற்றினர்.
65 வயது மதிக்கதக்கவர் யார்? எந்த ஊரைச்சேர்ந்தவர்? எதற்காக பெரம்பலூர் வந்தார்? எதனால் உயிரிழந்தார்? என பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.