பெரம்பலூர் , குன்னம் சட்டமன்ற தொகுதிகளில் புதிதாக அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்கள் குறித்து ஆட்சேபனை இருந்தால், வரும் ஆக்.21க்குள் தெரிவிக்கலாம் – மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான தரேஸ் அஹமது தகவல் தெரிவித்துள்ளார்.

இது அவர் மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது ;

பெரம்பலூர் மாவட்டம், 147 பெரம்பலூர் (அ.வ) சட்டமன்ற தொகுதியில் 1438 வாக்காளர்களை கொண்ட அரூம்பாவூ (18), 1243 வாக்காளர்களை கொண்ட எறையூர் கல்பாடி (276) மற்றும் 1235 வாக்காளர்களை கொண்ட சிறுவாச்சூர்(245) ஆகியவை புதிய வாக்குச்சாவடி மையங்களாக பிரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அதுபோல, 148 குன்னம் சட்டமன்ற தொகுதியில் 1403 வாக்காளர்களை கொண்ட லப்பைகுடிகாடு (7), 1238 வாக்காளர்களை கொண்ட கீழப்பெரம்பலூர் (40), 1210 வாக்காளர்களை கொண்ட ஆய்குடி (79), 1201 வாக்காளர்களை கொண்ட புதுவேட்டைகுடி (114), 1237 வாக்காளர்களை கொண்ட பேரளி (127), 1219 வாக்காளர்களை கொண்ட சில்லகுடி (196), 1217 வாக்காளர்களை கொண்ட அங்கனூர் (202), 1221 வாக்காளர்களை கொண்ட அயன்தத்தனூர் (222), 1226 வாக்காளர்களை கொண்ட குலும்மூர் (226) மற்றும் 1228 வாக்காளர்களை கொண்ட சிறுகடம்பூர்(40) ஆகியவை புதிய வாக்குச்சாவடி மையங்களாக பிரிக்க உத்தேக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட பகுதிகள் புதிய வாக்குச்சாடி மையங்களாக பிரிக்கப்பட உள்ளதால் இது தொடர்பாக ஆட்சேபனை தெரிவிப்பவர்கள் 21.08.2015-க்குள் மாவட்ட ஆட்சியரிடமோ, பெரம்பலூர் சார் ஆட்சியரிடமோ தெரிவிக்கலாம். என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!