பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் இளம்பை.தமிழ்செல்வனை ஆதரித்து வாலிகண்டாபுரம் கிராமத்தில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் அதிமுக கொள்கை பரப்பு மாநில துணைச்செயலளார் நாஞ்சில்.சம்பத் கலந்து கொண்டு பேசியதாவது :
அதிமுக ஆட்சியின் 5 ஆண்டுகால திட்டங்கள் குறித்து விளக்கி பேசிய நாஞ்சில்.சம்பத் அனைவராலும் கைவிடப்பட்ட திமுக போக்கு அற்ற கட்சியா? 234 தொகுதியிலும் இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்தி இந்தியாவில் வரலாற்று பதிவு ஏற்படுத்திய அதிமுக போக்கு அற்ற கட்சியா? 5 ஆண்டுகளில் 54 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறார். இதனை முன்னிலை படுத்தி நாங்கள் வாக்கு கேட்கிறோம்.
திமுக ஆட்சி காலத்தில் நடந்தவை என்ன என்று பெரம்பலூர் அறியும், 1லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் 2ஜி ஸ்பெக்டரம் ஊழலில் நடந்தது என்ன என்பதை சொல்ல முடிவு எடுத்ததால் இஸ்லாமியயரான சாதிக்பாட்ஷா கொலை செய்யப்பட்டார்.
தமிழ் ஈழம் பற்றி பேசியதால் என் மீது 49 வழக்குகள் திமுக ஆட்சி காலத்தில் போடப்பட்டது. தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டவன் நான். சேலம் மத்திய சிறையத்தவிர தமிழகத்திலுள்ள 7 சிறைச்சாலைகளை வாசம் செய்திருக்கிறேன்.
ராஜீவ் கொலை வழக்கில் 25 ஆண்டுகளாக சிறையிலுள்ள நளினி, பேரறிவாளன் உட்பட 7 தமிழர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தவர் ஜெயலலிதா, கருணாநிதி தமிழகத்தின் முல்வராக வந்தால் ஒன்று நடக்காது, தேர்தலுக்காக பேசுகிறார். அவரது குடும்பம் நன்றாக இருக்கும் என்றும் திமுக முன்னாள் அமைச்சர்களான நேரு, எம்.ஆர்.கே, பொன்முடி ஆகியோர் ஏரளமான இடங்களை சட்டத்திற்கு புறம்பாக வளைத்து போட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டி பேசினார்.
மேலும் பேசியதாவது: அதிமுகவின் 5 ஆண்டு சாதனைகளை விளக்கி பேசிய அவர், அவரது மனைவி, அம்மா பெட்டகம் வாங்க ஆசைப்படுவதாகவும், ஆனால் அம்மாவின் வேட்பாளர்கள் வெற்றி பெற ஆசை படுவதாக வும் அவர் தெரிவித்தார்.
இதே போன்று பல நகைச்சுவையுடன் பேசினார். எதிர்கட்சிகளை சிலேடையில் மேடை நாகரீகம் இன்றி பேசினார்.
பொதுக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ஆர்.டி.இராமச்சந்திரன் உள்பட கட்சி பிரமுகர்கள், பேரூர் கிளை கழக நிர்வாகிகள் பெண்கள் பெரும் திராளக கலந்து கொண்டனர்.