46th Annual General Meeting of the Shareholders of Perambalur Sugar Mill!

பெரம்பலூர் சர்க்கரை ஆலை பங்குதார்களின்ர 46வது வருடாந்திர பேரவைக்கூட்டம் அரசு முதன்மைச்செயலாளரும் சர்க்கரைத்துறை ஆணையருமான சி.விஜயராஜ்குமார், தலைமையில், பெரம்பலூர் சர்க்கரை ஆலை இயக்குநரும், கலெக்டருமான க.கற்பகம், முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் எறையூரில் அமைந்துள்ள பெரம்பலூர் சர்க்கரை ஆலையின் பங்குதாரர்கள், கரும்புவிவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை தெரிவித்தனர்.

கரும்பு விவசாயிகள் வழங்கிய கரும்பிற்கு காலதாமதம் செய்யாமல் உடனுக்குடன் உரிய தொகையினை வழங்கியதற்காக அரசிற்கு நன்றி தெரிவித்த விவசாயிகள், கரும்பு வெட்டுக்கூலியினை ஆலை நிர்வாகமே ஏற்க வேண்டும், எத்தனால் ஆலை அமைக்க வேண்டும் என்றும், பெரம்பலூர் சர்க்கரை ஆலைக்கு அரசு வழங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், ஆலையைச் சுற்றி கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கரும்பு விவசயிகள் தெரிவித்தனர்.

பின்னர் அரசு முதன்மைச்செயலாளரும் சர்க்கரைத்துறை ஆணையருமான சி.விஜயராஜ்குமார் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு சர்க்கரைக் கழகத்தின் உபநிறுவனமாக திகழும் பெரம்பலூர் சர்க்கரை ஆலையின் 46வது வருடாந்திர பேரவைக் கூட்டத்தில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன். இங்கு பங்குதாரர்கள் மற்றும் கரும்பு விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகள் ஒவ்வொன்றும் அரசின் கவனதிற்கு கொண்டு செல்லப்படும். ஆலை நிர்வாகத்தின் சார்பில் தீர்வுகாணப்படக் கூடிய கோரிக்கைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

பெரம்பலூர் மட்டுமல்ல தமிழ்நாடு சர்க்கரைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் மாநிலம் முழுவதும் உள்ள சர்க்கைரை ஆலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு ஆணையர் அலுவலகத்தில் இருந்தே ஆலைகளை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும், என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் சர்க்ரை ஆலையின் இயக்குநர்களில் ஒருவரும் மேலாண்மை இயக்குநருமான ரமணிதேவி, பெரம்பலூர் சர்க்கரை ஆலையின் தலைமை நிர்வாகி கே.ரமேஷ், இணை இயக்குநர் வேளாண்மை(பொ) கீதா மற்றும் சர்க்கரை ஆலை பங்குதாரர்கள், கரும்புவிவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!