பெரம்பலூர் : பெரம்பலூர் முத்து நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரகாசன் (60). பெரம்பலூரில் உள்ள கிருஷ்ணா தியேட்டரில் மேனேஜராக பணியாற்றி வந்த இவர் கடந்த 30ம் தேதி இரவு 11 மணியளவில் டூவீலரில் சென்றுக்கொண்டிருந்தார். டூவீலர் காமராஜர் வளைவு பகுதியில் திரும்பியபோது ஆத்தூர் ரோடு பகுதியிலிருந்து புது பஸ் ஸ்டாண்ட் நோக்கி வந்த தண்ணீர் டேங்கர் லாரி ஒன்று இவரது டூவீலர் மீது மோதியது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த இவர் திருச்சி கீதாஞ்சலி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு 2ம் தேதி இரவு மூளை சாவு ஏற்பட்டதை தொடர்ந்து சந்திரகாசனின் இதயம், கண், கிட்னி, கல்லீரல் ஆகிய உறுப்புகளை டாக்டர்கள் குழுவினர் தானமாக பெற்று அவற்றை ஐந்து நபர்களுக்கு பொறுத்தினர்.