பெரம்பலூர் . பெரம்பலூர் சட்ட மன்ற தொகுதி தேமுதிக மக்கள் நலக் கூட்டணி த.மா.கவின் தேமுதிக வேட்பாளராக கி.ராஜேந்திரன் போட்டியிடுகிறார்.
இன்று காலை சிறுவாச்சூர் கிராமத்தில் கூட்டணி கட்சியினருடன் துவங்கிய அவர் ஊழலற்ற ஆட்சி அமைக்கவும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் அமைக்கவும் விவசாயிகளின் வாழ்வாதாரம் முன்னேற்ற பாடுபட கூட்டணிக் கட்சியினருடன் சென்று அதிக அளவு வாக்கு வித்தியாசத்தில் தன்னை வெற்றி பெற வைக்க வேண்டும் என வாக்காளர்களிடம் கோரினார்.
பின்னர். விளாமுத்தூர், புதுநடுவலூர்; மேட்டூர், சொக்கநாதபுரம் கோனேரிபாளையம், செஞ்சேரி, ஆலம்பாடி, திருப்பெயர் ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தேமுதிக மாவட்ட பொருளார் சீனி.வெங்கடேசன், ஒன்றிய செயலாளர்கள் வாசு.ரவி (பெரம்பலூர்), சிவா.ஐயப்பன் (வேப்பந்தட்டை) உட்பட பொதுக்குழு உறுப்பினர் ரவிக்குமார், செல்லப்பிள்ளை, கூட்டணி கட்சியை சேர்ந்த விசிக, மதிமுக கம்யூனிஸ்ட் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.