இது குறித்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ்அஹமது விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் நகராட்சியில் காலியாக உள்ள நகரமைப்பு ஆய்வாளர் பணியிடம் ஒரு எண்ணிக்கை பூர்த்தி செய்வதற்கு 09.09.2015 அன்று காலை 11.00 மணிக்கு நேர்முக தேர்வு நடைபெற உள்ளது நேர்முக தேர்வில் கலந்து கொள்ள விரும்புவோர் உரிய தகுதி சான்றிதழ்களுடன் 08.09.2015 அன்று மாலை 5.00 மணிக்குள் ஆணையர் பெரம்பலூர் நகராட்சி என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க தெரிவிக்கப்படுகிறது.

08.09.2015 அன்று மாலை 5.00 மணி வரை கிடைக்கபெறும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலினை செய்யப்படும். மேலும் விண்ணப்பம் செய்தவர்களுக்கு நேர்காணலில் கலந்துகொள்ள எவ்வித அழைப்பும் அனுப்பப்படமாட்டாது. சம்மந்தப்பட்டவர்கள் 09.09.2015அன்று காலை 11.00 மணிக்கு நகராட்சி அலுவலகத்தில் நடைபெறும் நேர்காணலில் கலந்துக்கொள்ளலாம். நேர்காணலில் கலந்துகொள்ள குறிப்பிட்டுள்ள நேரத்திற்கு பின்னர் வருகைதரும் நபர்களின் விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

நகரமைப்பு ஆய்வாளரின் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க வேண்டிய கல்விதகுதி மற்றும் பிற தகுதிகள் பொதுப்போட்டி முன்னுரிமை பெற்றவர் கல்வி தகுதி விபரம் தமிழ்நாடு அரசு தொழில்நுட்ப கல்வி வாரியம் மூலம் எல்.சி.இ (அல்லது) டிப்ளமோ சிவில் பொறியாளர் பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (அல்லது) மாநில நிறுவனம் கூட்டுறவு தொழில் கல்வி திருச்சி மூலம் வழங்குகின்ற டிப்ளமோ கட்டிட கலை மற்றும் உள்கட்டிட வடிவமைப்பு (ஆர்கிடெக்) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். (அல்லது) தமிழ்நாடு அரசு அங்கீகரித்துள்ள ஏதாவது சமமான கல்வி தகுதி பெற்று இருக்க வேண்டும்.

பணியின் விபரம்: நகரமைப்பு பிரிவு சம்மந்தப்பட்ட கட்டிட வரைபட அனுமதி வழங்குதல் ஆக்கிரமிப்பு அகற்றுதல் அனுமதியற்ற கட்டிடங்களின்மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பான நகரமைப்பு பிரிவு சம்மந்தபட்ட அனைத்து பணிகளும்

வயதுவிபரம்: ஆதிதிராவிடர் மற்றும் (அருந்ததியர்) பழங்குடியினர் ஆகியோருக்கு 18 வயது முதல் 35 வயதிற்குட்பட்டவராகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு 18 வயது முதல் 32 வயதிற்குட்பட்டவராகவும் இதர பிரிவினருக்கு 18 வயது முதல் 30 வயதிற்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். என அவர் தெரிவித்துள்ளார்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!