பெரம்பலூர் நகராட்சிப்பகுதியில் முதலமைச்சரின் சிறப்புத் திட்டத்தின் கீழ் இல்லத்தரசிகளுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள் வழங்கும் நிகழ்ச்சி சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்செல்வன், பெரம்பலூர் நாடாளுமன்ற பி.மருதராஜா ஆகியோரது முன்னிலையிலும், தனித்துணை ஆட்சியர் (சிறப்புத்திட்ட அமலாக்கம்) தலைமையிலும் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் பி.மருதராஜா, சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலையில், 120 இல்லத்தரசிகளுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகளை தனித்துணை ஆட்சியர் (சிறப்புத்திட்ட அமலாக்கம்) ஆகியோர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பெரம்பலூர் நகர்மன்ற தலைவர் இரமேஷ், துணைத்தலைவரும் அதிமுக மாவட்ட செயலாளருமான ஆர்.டி.ராமசந்திரன், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.