பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் இரா.தமிழ்செல்வன் இன்று பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கட்சியினருடன் நேற்று முதல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
முன்னதாக பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட அரணாரை, கல்யாண் நகர், சங்குபேட்டை பகுதியில் பிரச்சாரம் செய்த வேட்பாளர் இரா.தமிழ்செல்வன் மதனகோபாலபுரம் வெங்கடேசபுரம்,விளாமுத்தூர் சாலை, ரோவர் ஆர்ச் உட்பட நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கும் வீதி, வீதியாக நடந்தும், வாகனத்தில் சென்றும் அதிமுக அரசின் 5 ஆண்டு கால சாதனைகளை விளக்கும் துண்டு பிரசுரங்களை பொது மக்களிடம் விநியோகித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
நகராட்சி வார்டுகள் தோறும் வேட்பாளர் தமிழ்ச்செல்வனுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தும், வெற்றி திலமிட்டும் வரவேற்றனர். மேலும், பல்வேறு இடங்களில் பட்டாசுகள் வெடித்தும், சால்வைகள் அணிவித்தும் சிறப்பான வரவேற்பு செய்தனர்.
அவர்களிடம் வேட்பாளர் தமிழ்ச் செல்வன் தன்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டார்.