பெரம்பலூர் நகராட்சியில் காலியாக உள்ள மின்பணியாளர் நிலை 2 பணியிடம் ஒரு எண்ணிக்கை பூர்த்தி செய்வதற்கு 26.08.2015 அன்று காலை 11.00 மணிக்கு நேர்முக தேர்வு நடைபெற உள்ளது நேர்முக தேர்வில் கலந்து கொள்ள விரும்புவோர் உரிய தகுதி சான்றிதழ்களுடன் 25.08.2015 அன்று மாலை 5.00 மணிக்குள் ஆணையர் பெரம்பலூர் நகராட்சி என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க தெரிவிக்கப்படுகிறது.
25.08.2015 அன்று மாலை 5.00 மணி வரை கிடைக்க பெறும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலினை செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது. விண்ணப்பம் செய்தவர்களுக்கு நேர்காணலில் கலந்து கொள்ள எவ்வித அழைப்பும் அனுப்பப்படமாட்டாது.
சம்மந்தப்பட்டவர்கள் 26.08.2015அன்று காலை 11.00 மணிக்கு நகராட்சி அலுவலகத்தில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது. நேர்காணலில் கலந்துகொள்ள குறிப்பிட்டுள்ள நேரத்திற்கு பின்னர் வருகை தரும் நபர்களின் விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மின்பணியாளர் நிலை- 2 பணியிடத்திற்கான கல்வி தகுதி மற்றும் பிற தகுதிகள் : பொதுப்போட்டி முன்னுரிமையற்றவர் ((G.T -General Non – Priority).
கல்வி தகுதி : சென்னை தொழில்நுட்ப கல்வி தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் டிப்ளமோ மின் (அல்லது) இயந்திரவியல் பொறியியில் துறையில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். (அல்லது) தேசிய கவுன்சில் மூலம் வழங்கப்பட்ட தொழில் வர்த்தகர்கள் பயிற்சியில் பயின்று மின்சார வர்த்தக சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும். (அல்லது) அங்கீகரிக்கப்பட்ட பள்ளியின் மூலம் மூன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை தேர்ச்சி சான்றிதழ் பெற்றதுடன் பம்ப் மற்றும் உந்தி இயந்திரங்களில் ஒரு வருட அனுபவம் மற்றும் மூன்று வருடம் மின்னியலாளர் ஆக அனுபவம் இருக்க வேண்டும். (அல்லது) மின்துறை சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் சேவை செய்து இருக்க வேண்டும். (அல்லது) ஏதாவது ஒரு நிறுவனத்தில் மின்சார மற்றும் உந்தி இயந்திரவியல் துறையில் நிறுவல் மற்றும் பழுது நீக்கம் பிரிவில் மூன்றாண்டு கால அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
இதர தகுதிகள் : மாற்று திறனாளி அல்லாமலும் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள தகுதியான ஆண்நபர்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம்.
பணியின் விபரம் : பெரம்பலூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் மின்கம்பங்களில் உள்ள தெருவிளக்குகள் பழுது நீக்கம் மற்றும் பராமரிப்பு பணிகள் நகராட்சியின் பராமரிப்பில் உள்ள குடிநீர் மின்மோட்டார்கள் பழுது நீக்கம் பணிகள் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டியது.