பெரம்பலூர் : பெரம்பலூர் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி இன்று சனிக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பழ வண்டி வியாபாரிகள், வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் சாலையின் இருபுறங்களிலும் ஆக்கிரமித்துள்ளனர்.
இதுகுறித்து பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்துக்கு பொதுமக்கள் புகார்களை தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில், பழைய பேருந்து நிலையம், தலைமை அஞ்லகத் தெரு, என்.எஸ்.பி. சாலை, கடைவீதி ஆகிய பகுதிகளில் இருபுறங்களிலுள்ள 100க்கும் மேற்பட்ட கடைகளின் எதிரே அமைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை, நகராட்சி ஆணையர் முரளி தலைமையில், நகராட்சி களப் பணியாளர்கள், காவல் துறை உதவியுடன் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.