பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலக செய்திக் குறிப்பில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் “மாதாந்திர சாலை போக்குவரத்து பாதுகாப்பு கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
அதில், நாளுக்கு நாள் பெருகி வரும் வாகன போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு பல்வேறு போக்குவரத்து மாற்றங்கள் குறித்து கலந்தாய்வு செய்யப்பட்டது.
குறிப்பாக பழைய பேருந்து நிலையம் வழியாக பெரம்பலூர் நகருக்குள் நுழையும், கனரக மற்றும் இலகு ரக வாகனங்கள் காமராஜர் வளைவு வழியாக எளம்பலூர் சாலை செல்லாமல் ரோவர் ஆர்ச் சாலை வழியாக சென்று ரோவர் பள்ளிக்கு முன்பு புதிதாக அமைக்கப்பட்டுள்ள சாலை வழியாக சென்று இராமகிருஷ்ணா பள்ளி இணைப்பு சாலை வழியே செல்ல போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
மேலும், இந்த புதிய போக்குவரத்து மாற்றம் வருகின்ற 14.08.2015-ந் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்கள் புதிய வழித் தடத்திற்கு முழுமையாக ஒத்துழைப்பு தரும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறது என மாவட்ட காவல் அலுவலக செய்தி குறிப்பில் குறிப்பிடபட்டுள்ளது.