பெரம்பலூர்: பெரம்பலூர் நகர திமுக சார்பில் நீதி கேட்கும் பேரணி விளக்க பட்டிமன்றம் கூட்டம், பெரம்பலூர் நகர செயலாளர் எம்.பிரபாகரன் தலைமையில் நடைபெறுகிறது.
நகர துணை செயலாளர் ரெங்கராஜன் வரவேற்கிறார். நகர அவைத்தலைவர் துரைராஜ், நகர துணைச் செலாளர்கள் சபியுல்லா, கமலம் கோவிந்தசாமி, நகர பொருளாளர் முத்துக்குமார், மாவட்ட பிரதிநிதிகள் ஜெயக்குமார், ரெங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆ.இராசா, பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி, மாவட்ட செயலாளர்கள் குன்னம் ராஜேந்திரன் (பெரம்பலூர்), சிவசங்கர்(அரியலூர்) ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர். ஒன்றிய செயலாளர்கள் பெரம்பலூர் அண்ணாதுரை, ஆலத்தூர் கிருஷ்ணமூர்த்தி, வேப்பூர் மதியழகன்,வேப்பந்தட்டை நல்லத்தம்பி உள்பட கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.