பெரம்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் 2015-2016ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகின்ற ஜுன் 01ஆம் தேதி துவங்குகிறது.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் மெ.பன்னீர்செல்வம் கூறியதாவது: குரும்பலூரில் அமைத்துள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் 2015-2016 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வருகின்ற ஜுன் -1ஆம் தேதி பி.லிட் தமிழ் மற்றும் பி.ஏ. ஆங்கிலம் பாடப்பிரிவுகளுக்கும், ஜுன் 2 ஆம் தேதி அனைத்து இளம் அறிவியல் (பி.எஸ்.சி கணிதம், வேதியியல், இயற்பியல், கணினி அறிவியல், கணினி பயண்பாட்டியில், உயிர் தொழில்நுட்பவியல், நுண்ணுயிரியல்) பாடப்பிரிவுகளுக்கும், ஜுன் – 3ஆம் தேதி அனைத்து கலைப்பிரிவு (பி.ஏ. வரலாறு, சுற்றுலா மற்றும் பயணமேலாண்மையில், சமூகப்பணி, வணிகவியல், மேலாண்மையியல்) பாடப்பிரிவுகளுக்கும் மாணவர் சேர்கை நடைபெறஉள்ளது.
இப்பாடப்பிரிவுகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான அழைப்புக் கடிதம் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. ஆகவே, மேற்குறிப்பிட்டுள்ள தேதிகளில் கலந்தாய்வு நடைபெறஉள்ளதால் இளநிலை பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்தவர்கள் கல்லூரியில் அணுகி அறிந்துக்கொள்ளுமாறும், மேலும் கலந்தாய்வு நாளன்று பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் -2, மாற்றுச்சான்றிதழ் -2, சாதிசான்றிதழ் -2 நகல்களும், அண்மையில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவுள்ள 2 புகைப்படம், சுயமுகவரியிட்ட ரூ.5க்கான அஞ்சல் வில்லை ஒட்டிய கவர் 4, உடல் ஊனமுற்றோராக இருப்பின் மருத்துவச் சான்றிதழ் மற்றும் விளையாட்டு, என்.சி.சி சான்றிதழ்களின் நகல்கள் ஆகியவற்றின் அனைத்து ஒரிஜினல் சான்றிதழ்களும் கொண்டுவரவேண்டும் என்று கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2021 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for Tamil Daily News -Kalaimalar.

error: Content is protected !!