பெரம்பலூர் : பெரம்பலூர் – துறையூர் புறவழிச் சாலையில், வடக்கு மாதவி பிரிவுச்சாலையில் நேற்றிரவு 10.45 மணிக்கு, அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
பெரம்பலூர் மாவட்டம் வடக்கு மாதவி கிராமத்தை சேர்ந்தவர் மாயவன் மகன் மகேந்திரன் ( 23), கொத்தனார். இவர் நேற்றிரவு தனது தொழில் நண்பர்களான தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தை சேர்ந்த முத்து(25) உள்பட 3 பேர் மொபட்டில் புறவழிச் சாலையை கடக்க முயன்றதாகவும், மது அருந்தி இருந்ததாகவும் கூறப்படுகிறது. இறந்த மற்றொருவரின் உடலை அடையாளம் காண்பதில் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் தாமதம் ஏற்ட்டு வருகிறது.
மேலும், இறந்தவர்கள் மூன்று பேரும் உயிருடன் இல்லாததால் அவர்களை பற்றியும், விபத்து நடந்தது பற்றியும் பல்வேறு குழப்பங்கள், சந்தேகங்கள் உள்ளதால் பெரம்பலூர் போலீசார் இது குறித்து தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்தில் பலியானவர்களின் உடலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.