பெரம்பலூர் : பெரம்பலூரில் பழுதடைந்த மதனகோபாலசுவாமி கோவில் தேர் ரூ.40 லட்சம் செலவில் புதுப்பிக்கும் பணி இன்று துவங்கப்பட்டது.
பெரம்பலூரில் உள்ள பஞ்சப்பாண்டவருக்கு தனி சன்னதி உள்ள வியாக்ரபாத முனிவர் சாபவிமோசனம் பெற்ற தலமான மரகதவல்லித்தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவில் உள்ளது.
இக்கோவில் தேருக்கு கடந்த 10 ஆண்டுக்கு முன்பு திருச்சி பாரத மிகு மின் ஆலையில் தயாரான 4 இரும்பு சக்கரங்கள்பொருத்தப்பட்டது.
பொதுமக்கள் பங்களிப்புடன் இந்த தேரை புதுப்பிக்க இந்து சமயஅறநிலையத்துறை ரூ.15 லட்சம் நிதிஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் பொதுமக்கள் பங்களிப்பாக ரூ.25 லட்சம் நிதிவசூல் செய்து இந்த தேரை புதுப்பிக்குமாறு பெரம்பலூர் தர்மபரிபாலன சங்கத்திற்கு அறநிலையத்துறை அனுமதிவழங்கியது.
தேரில் பழுதடைந்திருந்த மரசிற்ப வேலைப்பாடுகள் கடந்த 2 மாதமாக சீரமைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஏறத்தாழ ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் தேர் பாகங்களை புதுப்பிக்கும் திருப்பணி(பூதப்பார்) இன்று தொடங்கப்பட்டது.
பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவில் செயல்அலுவலர் ராஜேந்திரன் முன்னிலையில் தேர்புதுப்பிக்கும் திருப்பணியை நகர வர்த்தகர் சங்க தலைவரும் தர்மபரிபாலன சங்க தலைவருமான பழனியாண்டிபிள்ளை துவக்கிவைத்தார்.
இதை ஒட்டி தேர்அச்சு தேரோடும் வீதிகளின் வழியே ஊர்வலமாக எடுத்தவரப்பட்டு தேரில் பொருத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மரச்சிற்பி பழனிவேல், முன்னாள் அறங்காவலர்கள் தெ.பெ.வைத்தீஸ்வரன், சரவணன், வெள்ளந்தாங்கி அம்மன்கோவில் பரம்பரை தர்மகர்த்தா தர்மராஜன், கவிதா மணி, ஆடிப்பெருக்குவிழா கமிட்டி ஒருங்கிணைப்பாளர் குமார் ஆகியோர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.