பெரம்பலூர் ரெங்கா நகரில் உள்ள மரகதம் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் மாணவர்கள் இன்று கிறிஸ்துமஸ் தாத்தா கேக் வெட்டி கொண்டாடி உண்டு மகிழ்ந்தனர். குழந்தை இயேசுவின் பிறப்பை நாடமாக நடித்து காட்டினர். பாடல்களையும் பாடி திறமைகளை வெளிப்படுத்தினர். ஹிந்தியில் அனைவருக்கும் புத்தாண்டு வாழத்துக்களை தெரிவித்துக் கொண்டனர். பள்ளி தாளாளர் நிருபா சரவணன், மூத்த ஆசிரியை மரகதம் மற்றும் தலைமை ஆசிரியை சீதாலஷ்மி உள்பட பள்ளி ஆசிரியர்கள் இதில் கலந்து கொண்டனர்.